ராம்கர்: ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர்-பொகாரோ சாலையில், நள்ளிரவில் கார் ஒன்று லாரி மீது மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர். லாரி பகுதியில் உள்ள சாலையில் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் எதிரே வந்த லாரி மீது கார் மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் உடனடியாக மீட்கப்பட்டு, ராம்கர் சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜ்ரப்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரங்மர்ச்சா பகுதியைச் சேர்ந்தவர்கள் என ராம்கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
