×

பைனான்சியருக்கு ஏட்டு மனைவி தங்க மாலை அணிவித்த விவகாரம்

3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய டம்மி நகை

*விசாரணையில் அம்பலம்

சேலம் : சேலம் பைனான்சியருக்கு தங்கமாலை அணிவித்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அது 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய டம்மி நகை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.சேலம் பழைய சூரமங்கலத்தை சேர்ந்தவர் பைனான்சியர் பெருமாள். இவரது மனைவி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். பைனான்சியர் பெருமாள் ரீல்ஸ் மோகம் கொண்டவர்.

அவரது பிறந்தநாளை மனைவி ரீல்ஸ் எடுத்து கொண்டாட முடிவு செய்தார். அதன்படி பெருமாள் அலுவலகத்திற்கு வருவது போன்றும், அவரை வரவேற்று மனைவியான ஏட்டு, பிரமாண்டமான 15 பவுன் எடை கொண்ட தங்க நகையை கணவருக்கு அணிவிப்பது போலவும் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை பார்த்த சேலம் எஸ்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதற்கிடையில் அந்த ஏட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்தாலும் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. இதற்காக அவரது கணவர் அந்த பிரம்மாண்டமான தங்க நகையுடன் போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.

அப்போது அது தங்க நகை இல்லை எனவும், புதிய பஸ்நிலையம் அருகேயுள்ள கடையில் 3ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதற்கான பில்லையும் அவர் கொண்டு வந்து காட்டினார். இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுபோன்ற நகைகள் 3 மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறிவிடும். இதனால் அதனை அவ்வப்போது கோல்டு கலரில் முக்கி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிறம் மாறாமல் இருக்கும். இதுபோன்ற ஏராளமான நகைகள், விதவிதமான ஆடைகளும் பெருமாள் வீட்டில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

தங்க நகை இல்லை என்றால் ஏன் இவ்வளவு பில்டப் செய்ய வேண்டும். நீங்கள் மட்டும் ரீல்ஸ் எடுத்து வீடியோ போட்டுக் கொள்ள வேண்டியது தானே. அரசு பணியில் இருக்கும் மனைவியை ஏன் பிரச்னையில் சிக்க வைக்கிறீர்கள் என போலீசார் அறிவுரை வழங்கி அவரை அனுப்பி வைத்தனர். இதன் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Ambalam Salem ,Suramangalam ,Salem… ,
× RELATED திருவாலங்காடு – அரக்கோணம் 4 வழி...