- திருவள்ளூர்
- மாவட்டம்
- Thamaga
- திருத்தணி
- திருவள்ளூர் மத்திய மாவட்டம்
- தமிழ் மானய காங்கிரஸ் கட்சி
- டி.எம். வெங்கடேசன்
- ஜி.கே. வாசன்…
திருத்தணி, ஜூன் 25: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார். ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவராக திருத்தணியை சேர்ந்த டி.எம்.வெங்கடேசன் பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்து போட்டியிட்ட தமாக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. இதனால் கட்சி பலவீனமடைந்துள்ள நிலையில், மாவட்ட தலைவராக செயல்பட்டாலும் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததால், தொடர்ந்து தமாகாவில் செயல்பட முடியாத நிலை இருப்பதாக கூறி, மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு அனுப்பிய கடிதத்தில் டி.எம்.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
