- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கத்தார்
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- ராஸ் லபான் தொழிற்பேட்டை
- பாபித்
- யாகோபுரம்
- சிதம்பரபுரம்
- ராதாபுரம் தாலுகா
- திருநெல்வேலி மாவட்டம்
சென்னை: முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கத்தார் நாட்டில் ராஸ் லபான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த கடந்த 21ம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சிதம்பராபுரம் யாக்கோபுரத்தைச் சேர்ந்த பபித் (26), பணகுடி பகுதி சிவகாமிபுரத்தை சேர்ந்த சஜித்குமார் (25) மற்றும் அழகியநம்பியாபுரத்தை சேர்ந்த சுவின் (24), ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு, இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்துடனும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசுவை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கீழ் தமிழ்நாடு அரசின் உதவி எண்களான இந்தியாவிற்குள் +91 1800 309 3793, வெளிநாட்டு தொடர்புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
