×

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.15ல் விஜய் தொடங்கி வைக்கிறார்: ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இதற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு முதல்வரின், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் விஜய் துவக்கி வைப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vijay ,Chennai ,Chief Minister ,Tamil Nadu government ,
× RELATED தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற புதிய கெடுபிடி