ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் தவெக கொடிகளை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பிகளில் பள்ளி மாணவர்களை விட்டு கட்ட வைத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளது. சீருடையில் பள்ளி மாணவர்களை கட்சிக் கொடிகளைக் கட்ட வைத்தவர்களை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
