- மதுரை
- அலுமினிய பானை சுழற்றும் கைத்தொழிலாளர் சங்கம்
- மதுரை மாவட்ட அலுமினிய பானை நூற்பு கைத்தொழிலாளர் சங்கம்
- செல்லூர்
மதுரை, ஜூன் 23: ஒப்பந்தப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென, அலுமினிய பாத்திர உடலுழைப்பு ெதாழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாவட்ட அலுமினிய பாத்திர ஸ்பின்னிங் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நேற்று, செல்லூரில் நடந்தது. இதில், சங்கத்தின் தலைவர் விஜயன், பொருளாளர் பாண்டியராஜன், துணை தலைவர் செல்வம், செயலாளர் கண்ணன், துணை செயலாளர் அரசு, துணை பொருளாளர் நாராயணன் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கடந்த மே மாதம் அலுமினிய பாத்திர ஒப்பந்த கூலிப் பட்டறை உற்பத்தியாளர் சங்கமும், அலுமினிய பாத்திர ஸ்பின்னிங் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்க ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும், ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல், கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, அலுமினிய பாத்திர ஒப்பந்த கூலி பட்டறை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தொழிலாளர் நல அலுவலகத்தில் இந்தாண்டுக்கான தீபாவளி போனஸ் குறித்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தொழிலாளர் நல அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
