×

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் 25ம் தேதி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 

மயிலாடுதுறை, ஜூன் 22: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெற்றது. மயிலாடுதுறை கலெக்டர் காந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலைமையில் 25.6.2026 (வியாழக்கிழமை) அன்று 3 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Special Grievance Redressal Day ,Mayiladuthurai Collectorate ,Mayiladuthurai ,Collector ,Kanth ,Grievance Redressal Day ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...