நாகப்பட்டினம், ஜூன் 22: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாணவ, மாணவிகள் யோக பயிற்சி செய்தனர். சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை தூய மைக்கேல் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்ட அரசு சித்த மருத்துவதுறை சார்பில் புதிய கடற்கரையில் யோக பயிற்சி நடந்தது. அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட முதன்மை நிதி அலுவலர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
