மயிலாடுதுறை, ஜூன் 22: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட கலெக்டர் 2025-26 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பச்சைப்பயிறு கொள்முதல் செய்வதை ஆய்வு செய்தார்.பச்சைப்பயிரானது செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்க்கு 100 மெ.டன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், 61.3 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் மாநில சேமிப்பு கிடங்கில் இருப்பு வைத்ததற்கான நில ஆதார ஆவணங்களை ஆய்வு செய்தார்.
