×

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 16 பேர் பலி

 

ஜெருசலேம்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின. இந்நிலையில் ஆரம்பகட்ட ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தலாக லெபனானில் கடுமையான சண்டை நடந்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தெற்கு லெபனான் முழுவதும் பல்வேறு இலக்குகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 16 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்வதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை எதிர்கொள்ளும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தல் நீக்கப்படும் வரை இஸ்ரேலிய படைகள் லெபனானில் இருக்கும் என்று கூறி படைகளை திரும்ப பெறுவதற்கு மறுத்துவிட்டார்.

Tags : Israel ,Lebanon ,Jerusalem ,Iran ,United States ,Switzerland ,Hezbollah ,
× RELATED அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம்...