×

சென்னை பூவிருந்தவல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் மேலும் தாமதம்..!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் முதல் முதலாக நிறைவடைந்திருக்கக்கூடிய பூவிருந்தவல்லி பைபாஸ் முதல் மற்றும் வடபழனி வரையிலான 14.6 கிலோமீட்டர் நீளமுடைய இந்த வழித்தடத்தில், மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட சூழ்நிலையில இது வரை இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வழித்தடத்தில் மெட்ரோ சேவையைத் தொடங்குவதற்கான துவக்க விழா தேதியை நிர்ணயிக்குமாறு ஒன்றிய அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைத்தும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், அது இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு மாற்றப்பட்ட நிலையிலும் இன்னும் தாமதம் நீடிக்கிறது. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் நிறைவடைந்து, ரயில் சேவையைத் தொடங்கும் வகையில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai Boorundawalli ,Vadpalani ,Metro Rail ,Chennai ,Chennai Metro Rail ,
× RELATED ஓசூர் மாநகரை சுற்றிலும் புதிய...