×

அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

 

இலுப்பூர், ஜூன் 19: அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மெய்யாம்மாள், காவலர் ஹேமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல ஆற்றுப்படுத்துனர் ரமாபிரியா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திருமணம்,குழந்தை கடத்தல், குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் போன்றவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Annavasal Government Secondary School ,Ilupur ,Headteacher ,Kanakaraj ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...