×

சீர்காழி சுற்று வட்டார பகுதியில் திடீர் மழை

 

சீர்காழி, ஜூன் 19: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் இடி, மின்னல் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி சென்று திரும்பிய மாணவ, 0மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீடுகளுக்கு சென்றனர்.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தன. தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், இந்த திடீர் மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Sirkazhi ,Mayiladuthurai district ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...