×

கிணற்றில் விழுந்து தத்தளித்த மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்: வனப்பகுதியில் விடப்பட்டது

 

இலுப்பூர், ஜூன் 18: இலுப்பூர் அருகே கிணற்றில் விழுந்து கிடந்த ஆண் மயில் ஒன்றை இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இலுப்பூர் அருகே உள்ள பாப்பான் களம் பகுதியில் உள்ள மாணிக்கம் என்பவரின் 40 அடி ஆழம் உள்ள தண்ணீர் இருந்த கிணற்றில் ஆண் மயில் ஒன்று கிடப்பதாக இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இலுப்பூர் தீயணைப்புத் துறை நிலை அலுவலர் மகேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனக்காவலர் கோபால் என்பவரிடம் மயில் ஒப்படைக்கப்பட்டது. மயிலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

Tags : Ilupur ,Manickam ,Pappan Kalam ,Ilupur… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...