×

சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு – போலீசார் விசாரணை

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் முகத்தில் பிளாஸ்டிக் கவரை மூடி இறுக்கமாக கட்டியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் பெரியார் சிலையின் முகத்தில் இருந்து பிளாஸ்டிக் கவரை அகற்றினர். பெரியார் சிலையின் முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Peryaar ,Salem ,Periyar ,
× RELATED காவல் அதிகாரிகள் 15 பேர் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு