×

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

 

கீழக்கரை, ஜூன் 16: கீழக்கரை நகரில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் சரக்கு வாகனங்களில் ஏற்றக்கூடிய இரும்பு கம்பிகள், பிளைவுட், மரப்பலகைகள், இரும்பு ஏணிகள் உள்ளிட்ட பொருள்களை பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில் ஏற்றிச் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வாறு அதிக பாரம் ஏற்றிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கீழக்கரை நகரில் உள்ள ஹார்டுவேர்ஸ், மரப்பலகை கடை, தளவாடப் பொருள்கள், இரும்பு கம்பிகள், செங்கல், ஜல்லி கற்கள், விற்பனை செய்யக்கூடிய இடங்களில் பயணிகள் சவாரி செய்யக்கூடிய ஆட்டோக்களை கொண்டு வந்து அவற்றின் மேற்பகுதிகளில் 15 முதல் 20 அடி நீளம் உள்ள பெரிய அளவிலான இரும்பு பொருட்கள் மற்றும் மரப்பொருள்களை ஏற்றி விடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும், தளவாடப் பொருட்களால் எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

Tags : Keezhakarai ,Ramanathapuram district ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...