×

வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கானோரின் கனவுகள் மீதான தாக்குதல்: ராகுல்காந்தி கண்டனம்

புதுடெல்லி: ராஜஸ்தானின் கோட்டாவில் நடக்கஉள்ள முதல் மாணவர் மாநாட்டுக்கு முன்னதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் , ‘‘ இன்று இந்த நாட்டில் மாணவர்களுக்கு கிடைப்பது கடின உழைப்புக்கான பலன் அல்ல. மாறாக கனவு காணத் துணிந்ததற்கான தண்டனை தான். ஒவ்வொரு வினாத்தாள் கசிவும் ரத்து செய்யப்படும் ஒவ்வொரு தேர்வும் முடக்கப்பட்ட ஒவ்வொரு பணி நியமனமும் வெறும் நிர்வாகத் தோல்விகள் மட்டுமல்ல. லட்சக்கணக்கானோரின் கனவுகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள். நீங்கள் சோர்வடைந்து இருப்பதை நான் அறிவேன். நீங்கள் கோபத்தில் இருக்கிறீர்கள். ஆனால் இதனை நினைவில் கொள்ளுங்கள். அரசு செவிசாய்க்க மறுக்கும்போது நீங்கள் உங்கள் குரலை இன்னும் உரக்க எழுப்ப வேண்டும். ஜூன் 17 கோட்டாவில் துவங்கி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் மாணவர் களின் குரலை எடுத்துச் செல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rakulganti ,New Delhi ,Kota, Rajasthan ,Lok Sabha ,Rakulkanti ,
× RELATED வண்டல் மண் எடுக்க மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்