- அசோக் கெலத்
- பாஜா
- இந்திரன்
- காந்தி
- புது தில்லி
- ராஜஸ்தான்
- ஜெய்ப்பூர்
- அசோக் கெலாட்
- பஜாஜ்
- இந்திரா காந்தி
- Bajah
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்சியில் பேசிய ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், “பாஜ மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது. இந்திரா காந்தி தற்போது ஆட்சியில் இருந்திருந்தால், பாஜ போன்ற கட்சிகளை தடை செய்திருப்பார்” என பேசியிருந்தார். இதற்கு பாஜ பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தன் எக்ஸ் பதிவில், “இந்திரா காந்தியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை காலத்திலிருந்து காங்கிரஸ் எந்த பாடத்தையும் இன்னும் கற்று கொள்ளவில்லை. காங்கிரஸ் ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதை அசோக் கெலாட்டின் பேச்சு தௌிவுப்படுத்துகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு காந்தி வத்ரா குடும்பமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது மீண்டும் அவசரநிலையை நடைமுறைப்படுத்தி ஜனநாயகத்தை முற்றிலும் அழித்து விடும். அவசரநிலையை கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய காங்கிரஸ், இன்னமும் அதை நியாயப்படுத்தி பேசி வருகிறது.
அரசியல் எதிரிகளை ஒடுக்க காங்கிரஸ் தலைமை முயல்கிறது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் காந்தி வத்ரா குடும்பத்தினர் அரசியல் எதிராளிகளை தடை செய்ய விரும்புகின்றனர். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதிலும், பலவீனப்படுத்துவதிலும் காங்கிரஸ் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளது. காங்கிரசின் இத்தகைய அரசியல் சதிகளை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் மக்கள் காங்கிரசை எதிர்க்கட்சி வரிசையிலேயே இன்னும் வைத்துள்ளனர்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
