×

செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் மீண்டும் திறப்பு

சென்னை: செமஸ்டர் விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு கலை கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின.

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து ஏப்ரல் 13ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிவடைந்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூன் 15ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன. இளங்கலை 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும், அதேபோல், முதுகலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கின.

இதற்கிடையே, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 4ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு முடிவடைந்து, முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளன.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த...