×

தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஒண்ணுமே தெரியாது: அமைச்சர் காந்திராஜ் ஒப்புதல்

ராணிப்பேட்டை: தற்போது பதவியில் இருக்கும் தவெக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு ஒன்றும் தெரியாது என அமைச்சர் காந்திராஜ் ேபசினார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் கூட்ரோட்டில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக சார்பில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் பேசியதாவது:
இப்போது இருக்கும் அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று விமர்சனம் செய்கிறார்கள். ஆமாம் எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. உள்ளாட்சி தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் மீசையை எடுத்துக் கொள்வதாக சவால் விடுகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் முடிவின்போது அதிமுகவினர் அனைவரும் மொட்டை அடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சொரையூர் பகுதி பாமகவினர் 200க்கு மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் காந்தி ராஜ் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

Tags : Minister ,Gandhiraj ,Tevaga ,Ranipet ,Chief Minister ,Vijay ,Ranipet West District ,Mambakkam Koo Road ,Ranipet District ,
× RELATED 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த...