சென்னிமலை,ஜூன்15: சென்னிமலை அருகே மேற்கு வெப்பிலியில் உள்ள மயானம் பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு சட்டவிரோதமாகவும், கூடுதல் விலைக்கும் மது பாட்டில்களை விற்பனை செய்த வெப்பிலியை சேர்ந்த பழனிசாமி (61) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
