சிவகங்கை, ஜூன் 15: சிவகங்கையில் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுநர் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு முகாம் ஜூன் 17ல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 108, 102மற்றும் அமரர் ஊர்தி செயல்படுகிறது. இதில் பணிபுரிய ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் சிவகங்கை பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஓட்டுநருக்கு பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24வயதுக்கு மேல் 35வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.21,120வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி பட்டப்படிப்பில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி இதில் ஏதோ ஒரு படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.21,320 வழங்கப்படும். 19வயதிற்கு மேலும் 30வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். அனைத்து ஒரிஜினல் மற்றும் நகல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 89259 41825என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு 108ஆம்புலன்ஸ் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
