×

ராமர் கோயில் காணிக்கை மாயம்; போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்: அகிலேஷ் அறிவிப்புராமர் கோயில் காணிக்கை மாயம்; போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்: அகிலேஷ் அறிவிப்பு

லக்னோ: அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தில் மோசடி நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய கோடிக்கணக்கான காணிக்கை ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் மாயமாகி உள்ளதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

இச்சம்பவம் தொடர்பாக உபி அரசு 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
இது குறித்து அகிலேஷ் நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,இந்த சதியின் வேர் வெகு தொலைவில் இல்லை. எனவே, உண்மையை வெளிக்கொணர வேண்டுமானால், நடவடிக்கை எடுக்க வெகுதூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார். மேலும் அவர், “குற்றவாளிகளைக் காவல்துறையால் அடையாளம் காண முடியாவிட்டால், நாங்கள் உதவ முடியும் என்று குறிப்பிட்டார். இருப்பினும், அந்தப் பதிவில் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இதற்கிடையே ராமர் கோயில் கட்டுமான பணிகுழுவின் நிருபேந்திர மிஸ்ரா நேற்று கூறுகையில், ராமர் கோயில் அறக்கட்டளை காணிக்கை பணம் மாயமானது குறித்து விசாரிக்க அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்ததை வரவேற்கிறேன் என்றார்.

Tags : Ramar ,Achilesh ,Lucknow ,Ayodhi Ramar Temple ,Samajwadi Party ,Akhilesh Yadav ,
× RELATED ஒரு நாளைக்கு 200 லிட்டர் மட்டுமே...