சென்னை: சென்னை தி.நகர் மேம்பாலத்தில் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த திவ்யா கிருஷ்ணா என்பவர் எழும்பூர் மருத்துவமனைக்கு காரை ஓட்டிச் சென்றபோது, திடீரென டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் தி.நகர் பகுதியில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
