×

மகளிர் டி20 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

பர்மிங்காம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடந்து வருகிறது. பர்மிங்காமில் நடைபெறும் 6வது லீக் போட்டியில், குரூப் 1ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, கடந்த ஆண்டு சொந்த மண்ணில் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

அதனால், தற்போது டி.20 உலகக்கோப்பை மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பேட்டிங்கில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா வலு சேர்க்கின்றனர். பவுலிங்கில் ரேணுகா சிங், கிராந்தி கவுட், ஸ்ரீசரணி, அருந்ததி ரெட்டி ஆகியோர் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிப்பர்.

மறுபுறம் பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணியில், பேட்டிங்கில் அலியா ரியாஸ், ஏமன் பாத்திமா, ஆயிஷா ஜாபர் ஆகியோரும், பவுலிங்கில் சதியா இக்பால், ஆம்பர், உமிஹனி, தாஸ்மியா ஆகியோரும் உள்ளனர். இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குவதால், போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்புகிறது.

* இதுவரை நேருக்கு நேர்…
இரு அணிகளும் இதற்கு முன் 16 முறை டி20 போட்டியில் மோதியுள்ளன. இந்தியா 13, பாகிஸ்தான் 3ல் வென்றுள்ளன. உலகக்கோப்பையில் இரு அணிகளும் 8 முறை மோதியிருக்கும் நிலையில், 6-2 என இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

Tags : Women's T20 World Cup ,India ,Pakistan ,Birmingham ,10th ICC Women's T20 World Cup cricket series ,England ,Birmingham.… ,
× RELATED ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!