- தெவேகாஸ்
- திமுக
- அமைச்சர்
- வன்னியரசு
- திண்டிவனத்தில்
- அன்னம்புதூர்
- மரக்கானம் மேற்கு யூனியன்
- விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம்: என்னை வெற்றி பெற வைத்த திமுகவினருக்கு நன்றி, விசுவாசத்துடன் இருப்பேன் என்று அமைச்சர் வன்னிஅரசு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் மேற்கு ஒன்றியம் அன்னம்புத்தூர் கிராமத்தில் 20 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்துகொண்டு வீடு, வீட்டுமனை பட்டா, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வன்னி அரசு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பெயரை தனித்தனியாக கூறி நன்றி தெரிவித்தார். அவர் பேசுகையில், தவெக அமைச்சரவையில் நான் இருந்தாலும் எனக்கு தவெகவினர் ஓட்டு போடவில்லை. என்னை வெற்றி பெற வைத்தவர்கள் திமுகவினர் தான். அவர்களுக்கு நன்றி, விசுவாசத்துடன் இருப்பேன் என்று கூறியது தவெகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
