×

உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்காத விவகாரம் ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என நிதி அமைச்சர் மழுப்பல்: நெல்லையில் ஆய்வு நடத்தியவர் எஸ்கேப்

நெல்லை: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லைக்கு நேற்று வந்த அவர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கையை முதல்வர் வெளியிடுவார். நாங்கள் பொறுப்பேற்று 40 நாட்கள் தான் ஆகிறது. தேர்தல் அறிக்கையில் அறிவித்த எல்லா திட்டங்களையும் செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் அறிவிப்பார். தாமிரபரணி மற்றும் அதன் நீர்நிலை ஆதாரங்களை சுத்தப்படுத்தவும், தூர் வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா நிலை குறித்து ஆய்வு நடத்தி அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லையே என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று மழுப்பலாக பதிலளித்து விட்டு அமைச்சர் நழுவினார்.

Tags : Finance Minister ,Mahuppal ,Nellai ,Tamil Nadu ,Maria Wilson ,
× RELATED மதுராந்தகம் அருகே மின்வெட்டால் மூதாட்டி உயிரிழப்பு?