×

ரயிலில் சிக்கி குழந்தை பலி

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த பிஎன்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ். சமையல் வேலை செய்பவர். ரயில்வே தண்டவாளம் அருகே வீடு உள்ளது. இவரது 2 வயது மகன் விதுனுக்கு, நேற்று மாலை தாய் உணவு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது ஒரு ரயில் வேகமாக வந்தது. சத்தம் கேட்டு விதுன் திடீரென தண்டவாளம் அருகே ஓடியதில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

Tags : Nellikuppam ,B.N. Palayam Ambedkar Nagar ,Vidhun ,
× RELATED மதுராந்தகம் அருகே மின்வெட்டால் மூதாட்டி உயிரிழப்பு?