×

தவெக பிரமுகர் என கூறி ரேஷன் கடையில் ரூ.3000 கேட்டு மிரட்டல்: பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

சேலம்:சேலம் சூரமங்கலம் அருகே மாமாங்கம் பகுதியில் கூட்டுறவு ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பெண் விற்பனையாளர் பணியாற்றி வருகிறார். நேற்று ரேஷன் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அப்போது, அங்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், ரேஷன் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் தான் தவெக பிரமுகர் என கூறி தனக்கு ரூ.3000 கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.

அப்போது, ரேஷன் கடை அருகில் இருந்த பொதுமக்கள் இந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதனிடையே, தவெகவை சேர்ந்தவர் என கூறி ரேஷன் கடையில் ரூ.3000 கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அந்த நபரின் செல்போனை பறித்த பொதுமக்கள், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்தபோது, செல்போனை கொடுங்கள் சென்று விடுகிறேன் என அவர் கெஞ்சும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Tags : Salem ,Mamangam ,Suramangalam ,
× RELATED மதுராந்தகம் அருகே மின்வெட்டால் மூதாட்டி உயிரிழப்பு?