×

அரக்கோணம் யார்டு விரிவாக்கம்: சென்னை-திருப்பதி ரயில்கள் வரும் 26, 28ம் தேதி ரத்து

 

திருமலை: அரக்கோணம் யார்டில் நடைபெறும் விரிவாக்க பணிகள் காரணமாக, இந்த மாதம் 26 மற்றும் 28ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல்-திருப்பதி ரயில் உட்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே காலை 6.30 மணி மற்றும் மதியம் 2.24 மணிக்கு இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 26 மற்றும் 28ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வரும் 26ம் தேதி சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், 26 மற்றும் 28ம் தேதிகளில் திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 26ம் தேதி மாலை 6.05 மணிக்கு திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ARAKONAM ,YARD ,CHENNAI ,THIRUPATHI ,Thirumalai ,Arakonam Yard ,Chennai Central-Tirupathi Railway ,Southern Railway ,Chennai Central ,Tirupati ,
× RELATED இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக...