×

பெண்களுக்கு தவெகவினர் பாலியல் தொல்லை; ‘மாடர்ன் மனுநீதி சோழன்’ ஆட்சியா?: அதிமுக ஐடி விங்க் கேள்வி

சென்னை: அதிமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு: ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். சேலத்தில் தவெக நிர்வாகி ஒருவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக செய்திகள் வருகின்றன. இதுதான் ‘மாடர்ன் மனுநீதிச் சோழன்’ ஆட்சியா? இப்படி ஒரு வார்த்தையை சொல்ல இன்றைய ஆளுங்கட்சி ஆச்சரியக் குறிகளுக்கு வெட்கமே இல்லையா? அமைதிப்படை நாகராஜசோழனை விட கேவலமான ஒரு ஆட்சி தான் இங்கு நடக்கிறது. குற்றச்செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமானதை சுட்டிக் காட்டினால், தன் மீது வீண் பழி சுமத்துவதாக கூறும் இன்றைய முதல்வர், கடந்த 1 மாதமாக தொடர்ச்சியாக அவரது கட்சிக்காரர்களே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

ஆளுங்கட்சி என்றால் சகல குற்றங்களும் செய்யலாம்; சட்டத்தை மீறிய அதிகாரம் இருக்கிறது என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்? சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் இன்றைய முதல்வர் பேசியதை அவரது கட்சியினரே மதிக்கவில்லையா? தனி மனித ஒழுக்கத்தை முதலில் உங்களை சுற்றி இருப்பதை உறுதி செய்யுங்கள். அதுவே பாதி குற்றங்களை குறைத்துவிடும். மேற்கூறிய வழக்குகளில் தொடர்புள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Thaveka ,AIADMK IT Wing ,Chennai ,Vembuli ,Alandur ,Salem ,
× RELATED தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?