×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போதிய மழை இல்லாததால் பொய்க்கும் விவசாயம் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் கரிமூட்டம் தொழில்

 

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விவசாயம் பொய்த்துவரும் சூழலில், கரிமூட்டம் போடும் தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 35 கிராம ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வந்தது. குறிப்பாக, உப்பூர், கடலூர், சித்தூர்வாடி, வெட்டுக்குளம், கலங்காபுலி, ஆவரேந்தல், பாரனூர், சோழந்தூர், வடவயல், மங்கலம், கலக்குடி, செங்குடி, பூலாங்குடி, பிச்சனாகோட்டை, ரெகுநாத மடை, பொட்டக்கோட்டை, புலிவீர தேவன்கோட்டை, குயவனேந்தல், அரியான்கோட்டை, ஆப்பிராய் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி நடைபெற்று வந்தது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் நெல் விவசாயம் பொய்த்து வருகிறது. இதனால் சில கிராமங்களில் விவசாயிகள் மாற்று பயிராக மிளகாய், எள், பருத்தி பயிரிட்டனர். அதுவும் போதிய அளவில் விவசாயிகளுக்கு கைகொடுக்கவில்லை. இந்த பகுதிகளில் காட்டு கருவேல மரங்கள் அதிகம் உள்ளதால் கரிமூட்டம் போடும் தொழிலில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தொடர் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளும் இந்த தொழிலில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில் வெட்டப்படும் கருவேல மரங்களை விறகுகளாக லாரிகள் மூலம் திருப்பூர், கருர் உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

விறகுகளை கரிமூட்டம் போட்டும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: விவசாயத்தில் தொடர்ந்து இழப்பை சந்தித்து வரும் நிலையில் காட்டு கருவேல மரங்கள்தான் எங்களுக்கு கைகொடுக்கின்றன. விவசாயத்துடன் ஒப்பிடுகையில் இதில் ஓரளவு லாபம் கிடைக்கிறது. நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பில்லை. இப்பகுதியில் குறிப்பிடத்தகுந்த வகையில் வேறு தொழில் வாய்ப்புகள் இல்லை. இதனால், கருவேல மரங்கள் எங்களது வாழ்வாதராமாக மாறிவிட்டது. ஆஸ்.எஸ்.மங்கலம் பகுதியில் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தவும், ஆலைகள் கொண்டுவரவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

Tags : R.S.Mangalam ,Ramanathapuram district ,
× RELATED சென்னிமலை அருகே குடிநீர் கேட்டு மக்கள் திடீர் சாலை மறியல்