×

கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில் உலா வரும் காட்டுமாடுகள்: சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல்; தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில் உலா வரும் காட்டுமாடுகளால் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பூங்காவைச் சுற்றி முறையாக தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் பிரையன்ட் பூங்கா அமைந்துள்ளது. தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா 20 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இங்கு லட்சக்கணக்கான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரையன்ட் பூங்காவுக்கு வந்து மலர்களை ரசித்து செல்வது வழக்கம். மே மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் மலர்க் கண்காட்சியில் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் தோட்டக்கலைத்துறைக்கு கிடைக்கும். இந்த நிலையில் பூங்காவைச் சுற்றி முறையான தடுப்புச்சுவர் இல்லை. பல இடங்களில் பச்சைத் துணியை தடுப்பு வேலியாக அமைத்துள்ளனர். இதனால், அடிக்கடி காட்டுமாடுகள் பூங்காவுக்குள் புகுந்து உலா வருகின்றன.

சில சமயங்களில் பூங்காவில் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் அச்சுறுத்துகின்றன. எனவே, பூங்காவுக்கு தடுப்புச்சுவர் அமைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டுமாடுகளை அடர் வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bryant Park ,Kodaikanal ,Dindigul district, Godaikanal ,
× RELATED சென்னிமலை அருகே குடிநீர் கேட்டு மக்கள் திடீர் சாலை மறியல்