சென்னை: கணவனை இழந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை குறித்து முதலமைச்சர் விஜயின் வாக்குறுதிக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார் .
