ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி பிருந்தா தலைமை வைத்து திட்டத்தை துவக்கி வைத்தார்.
மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த சிங்கப்பெண் சிறப்பு படையில் இரண்டு சார்பு ஆய்வாளர்கள், நான்கு பெண் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுவார்கள். இவர்கள் பெண்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுலா தலங்கள் ஆகிய இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை ரோந்து பணி மேற்கொள்வர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்
