×

மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி கலெக்டர் காலில் விழுந்து கெஞ்சிய கண்டக்டர்

 

பொன்னேரி: மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே. மீஞ்சூர்-காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட ரயில்வே மேம்பாலப் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது 100க்கும் மேற்பட்ட மக்கள் வந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணி மந்தகதியில் நடந்து வருகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வலியுறுத்தினர். இந்நிலையில், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பணியில் இருந்த நடத்துநர் ஒருவர் கீழே இறங்கி ஓடிவந்து கலெக்டரின் கால்களில் விழுந்து கதறியபடி, இந்த உயர்மட்ட ரயில்வே மேம்பாலப் பணிகள் நீண்ட காலமாக முடியாமல் இழுத்து கொண்டிருப்பதால், தங்களை நாள்தோறும் ஏராளமான பயணிகள் அவதூறாக பேசி வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags : Minjur ,station ,Ponneri ,Minjur railway station ,
× RELATED லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் – ராமதாஸ்