- தமிழ்நாடு வர்த்தகர்கள் சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஏ. எம் விக்கிரமராஜா
- சென்னை
- கர்நாடகா அரசு
- மேக்கேதாடு அணை
- காவிரி
- கர்நாடக
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட முனைந்திருக்கும் செயலால் தமிழக விவசாயிகளுக்கும், கர்நாடக விவசாயிகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுபடுத்தும் நிலை உருவாகும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டிருக்கும் கருத்துக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் குடிநீர், விவசாயம் சம்பந்தமான அனைத்து நிலவரங்களையும் நிவர்த்தி செய்கின்ற வகையில் ஒரு நிலையான தீர்வுக்கு பேரமைப்பு என்றும் பக்கபலமாக இருக்கும்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதால், கர்நாடக விவசாயிகளுக்கும் எந்தவித பயனும் அளிக்காது. இதனால் கர்நாடக காவிரி பாசன பகுதி விவசாயம் அடியோடு அழியும் நிலையும், மேலும் தமிழக நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி விவசாய நிலங்கள் அடியோடு நீராதாரமின்றி விவசாய நிலங்கள் பாலைவனமாகும் சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, எதிர்ப்பாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தோள் கொடுக்கும் என்பதையும், போராட்டக் களத்தில் பங்கேற்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
