×

வரும் 12ம் தேதி முதல் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் தகவல்

சென்னை: போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 12ம் தேதி முதல் நடைபெறும் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட அறிவிப்பு: ரயில்வே தேர்வு வாரியத்தின் (ஆர்.ஆர்.பி) அசிஸ்டெண்ட் லோகோ பைலட் போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பு ஆகும்.

பணியாளர் தேர்வு வாரியத்தின் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். இப்போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், வருகிற 12ம் தேதி முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாக, அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு, decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

Tags : Chennai ,Chennai Collector ,District ,Collector ,S. Malathi Helen ,Railway Recruitment Board ,RRB ,
× RELATED ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை