நடிகர் சலீம்குமாரின் இறுதிச்சடங்கில் யூடியூபர்களால் பிரச்னை தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் போட்டோ, வீடியோ எடுத்தால் 3 வருடம் சிறை: கேரள போலீஸ் எச்சரிக்கை

 

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சலீம்குமார் உடல்நலக் குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன் மரணமடைந்தார். இவரது இறுதிச்சடங்கின் போது அங்கு ஏராளமான யூடியூபர்கள் குவிந்தனர். இதனால் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சலீம்குமாரின் மகன் நடிகர் சந்து, யூடியூபர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார். இந்நிலையில் கேரள போலீசும் யூடியூபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கேரள போலீசின் முகநூலில் கூறியிருப்பது: ஒரு தனிநபரின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அவருடைய அனுமதி இல்லாமல் வீடியோவோ, போட்டோவோ எடுத்து அதை வெளியிடுவது தகவல் உரிமை சட்டம் 2000 பிரிவு 66 இ யின் படி குற்றமாகும். இந்த செயலில் ஈடுபட்டால் 3 வருடம் வரை சிறையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு கேரள போலீசின் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: