×

முதல் கட்டமாக டவுன் பஸ்களில் அமல் கேரளத்தில் 15ம் தேதி முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் நேற்று முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி. ஜான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அமைச்சர் சி.பி. ஜான் கூறியது: கேரளத்தில் வரும் 15ம் தேதி முதல் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

முதல் கட்டமாக டவுன் பஸ்களில் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இதன்பிறகு அடுத்த கட்டத்தில் விரைவு பஸ்களிலும் இலவச பயணத்திட்டத்தை அமல்படுத்த முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும். திருநங்கைகளும் இலவச பயணம் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Tags : Kerala ,Thiruvananthapuram ,Congress alliance ,Congress ,
× RELATED நிதி முறைகேட்டில் சிக்கிய...