பலத்த காற்று, மழையால் டெல்லி விமான நிலையத்தில் இருந்த 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்

 

புதுடெல்லி: பலத்த காற்று, மழையால் டெல்லி விமான நிலையத்தில் இருந்த 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்தது குறித்து விசாரணை நடந்து வருவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2ல் நிறுத்தப்பட்டிருந்த 3 ஏர் இந்தியா ஏ-320 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து நகர்ந்ததால், தரையிறங்கும் உபகரணங்கள் மோதி சேதமடைந்தன. இதனால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

 

Related Stories: