- தெற்கு ரயில்வே
- Icourt
- சென்னை
- வைஷ்ணவி ஜெயக்குமார்
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஞானபாரதி
- பெரம்பூர் ரயில் நிலையம்
சென்னை: ரயில் நிலையங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பெரம்பூர் ரயில் நிலையத்தில் சாய்தள பாதை வசதி ஏற்படுத்தக் கோரி ஞானபாரதி என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெற்கு ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்கணேஷ், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் எந்தெந்த ரயில் நிலையங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, அந்த பட்டியலை அடுத்த வாரம் தாக்கல் செய்யுமாறு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
