×

₹55 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூர்,  மார்ச் 7: அரூர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று விவசாயிகள் கொண்டு வந்த 650  மூட்டை மஞ்சள் ஏலம் விடப்பட்டது. முதல் வாரத்தில் நேற்று ₹55 லட்சத்துக்கு  மஞ்சள் ஏலம் போனது. தர்மபுரி மாவட்டம் அரூரில், வேளாண்மை  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நடப்பு ஆண்டிற்கான முதல்  ஏலம் நேற்று நடைபெற்றது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி  கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளை  சேர்ந்த விவசாயிகள் 650 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.  சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள்  ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில்  விரலி மஞ்சள் புதியது குவிண்டால் ₹11,709 முதல் 13,005 வரையும், கிழங்கு  மஞ்சள் குவிண்டால் ₹9,399 முதல் 10,305 வரையும், விரலி மஞ்சள் பழையது  குவிண்டால் ₹7,899 முதல் ₹9,399 வரையும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ₹7,909  முதல் ₹8,900 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள்  கொண்டுவந்த 650 மூட்டை மஞ்சள் ₹55 லட்சத்துக்கு ஏலம் போனது என கூட்டுறவு  சங்கத்தின் மேலாண் இயக்குநர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED 'மோடி வேலை கொடுங்கள்'எனக்கேட்டு 55...