×

வெயில் சுட்டெரித்த நிலையில் திருமலையில் கோடை மழை: பக்தர்கள் மகிழ்ச்சி

 

திருமலை: திருமலையில் கோடை வெயில் சுட்ெடரித்து வந்த நிலையில் நேற்றிரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆந்திராவில் கோடை வெயில் 105 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரவிலும் புழுக்கம் தாங்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையிலும் வெயில் காரணமாக பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தரை விரிப்புகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் கடுமையான வெயில் கொளுத்தியது. ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தவித்தனர். இரவு திடீரென கோடை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் சாலை மற்றும் மாட வீதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த நிழற்பந்தல்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கட்டிடங்களில் தஞ்சம் அடைந்தனர். கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக மாறியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

24 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 93,230 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,754 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.83 கோடி காணிக்கை செலுத்தினர். 4.22 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 3.12 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. இதானல் பக்தர்கள் சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி ேநரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Andhra ,
× RELATED புதிய ராணுவ முகாம் அமைப்பதற்கு...