×

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 8: பெரம்பலூரில் நாளை (9ம்தேதி) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு, குறைதீர் கூட்டம் பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (9ம்தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மேகலா தலைமை வகித்து மின் நுகர்வோர்களிடம் குறைகள் தொடர்பான மனுக்களை பெறுகிறார். எனவே இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை, குறைகளை நேரில் முறையிட்டும், மனுக்களாக எழுதிக்கொடுத்தும் பயன் பெறலாம் என பெரம்பலூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்தார்.

Tags : Perambalur district ,Perambalur ,Perambalur Electricity Board ,Executive Engineer ,Electricity Board ,Ashok Kumar ,
× RELATED குடும்ப தகராறில் புரோட்டோ மாஸ்டர் தற்கொலை