×

குடும்ப தகராறில் புரோட்டோ மாஸ்டர் தற்கொலை

 

ஜெயங்கொண்டம், ஜூன் 15: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி (49) புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவரது மனைவி சுதா(45) வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறீர்களே என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த வீரமணி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்து தற்கெலை செய்து கொண்டார்.

இதில் வீரமணியின் அலறல் சத்தம் கேட்டு சுதா சென்று பார்த்தபோது தீயில் எரிந்து கொண்ட இருந்த வீரமணியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் தீயை அனைத்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் கட்ட சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Proto Master ,Jayankondam ,Veeramani ,Vilandhai South Street, Andimadam, Ariyalur district ,Sudha ,
× RELATED பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்