- சின்ஹாபென் சிறப்பு அதிரடிப்படை
- பெரம்பலூர்
- சமாஜ்வாடி
- லலித் குமார்
- பெரம்பலூர் SP
- Padalur
- எஸ்ஐ
- செந்தமிழ் செல்வி
பெரம்பலூர், ஜூன் 11: பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி லலித்குமார், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையில் பணிபுரியும் பெண் எஸ்ஐக்கள் பாடாலூர் எஸ்ஐ செந்தமிழ்ச் செல்வி (9498159903) தலைமையில் பெண் போலீசார் தேவி (7094534485), கீர்த்தனா (9080151589), டிரைவர் விக்னேஷ்( 9498218576) முதல் ஷிப்ட்டும், மருவத்தூர் எஸ்ஐக்கள் கமலி ( 8220143842) தலைமையில், பெண் போலீசார் ஆரோக்கியமேரி (76395 89820), சுதா ( 9360694676), டிரைவர் ராமராஜ் ( 94981 59277) அடங்கிய 2வது ஷிப்ட்டும் என இரண்டு ஷிப்டுகளாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு அதிரடிப்படையினர் குறித்து எஸ்பி லலித்குமார் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை வாகனம் மூலம் பெண்கள், குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு விரைவாக சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை, சிறப்பாக செயல்படும் என பெரம்பலூர் எஸ்பி லலித்குமார் தெரிவித்தார்.
