×

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.16 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்

ராமநாதபுரம், ஜூன் 8: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் சங்க பிரதிநிதிகளிடம் மனுக்கள் பெற்று பேசியதாவது, ‘‘மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கையான மருத்துவ சான்று வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய, நகராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றி தரப்படும்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.
பின்னர் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9,16,200 மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட சிறப்பு பெட்ரோல் வாகனங்கள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ramanathapuram ,District Disabled Welfare Department ,Ramanathapuram District Collectorate ,Collector ,Sivaguru Prabhakaran ,Environment ,Climate Change ,Minister ,Rajiv… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...