கொல்கத்தா: மேற்கு வங்கம், கொல்கத்தா மாநகராட்சி திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் பப்பாதித்யா தாஸ்குப்தா. மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் மற்றும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடிப்படையில் தாஸ்குப்தாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பரமிதா டே என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரின் தாஸ்குப்தாவை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
போலீஸ் நிலையத்தின் வெளியே அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சில அவர் மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதே போல் ஹவுரா அருகே ஷியாம்பூர் கிராமத்தில் மிரட்டி பணம் பறித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
